தொண்டை நாடு - திருவெண்பாக்கம் (பூண்டி நீர்த்தேக்கம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 73 கி.மீ. சென்னையிலிருந்து 63 கி.மீ. திருச்சியிலிருந்து 373 கி.மீ. மதுரையிலிருந்து 533 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ. சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருப்பதி சாலையில் திருவள்ளூர் வந்து அங்கிருந்து வரலாம்.
வரிசை எண் : 17
சிறப்பு : சுந்தரர் ஊன்றுகோல் பெற்ற தலம்
இறைவன் : ஊன்றீஸ்வரர்
இறைவி : மின்னொளியம்மை
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : கைலாய தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி (நீர்த்தேக்கம்), & அஞ்சல் – 602 023 (வழி) திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9245886900

இருப்பிட வரைபடம்


பிழையுளன பொறுத்திடுவர்
    என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
    படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
    கோயிலுளாயோ என்ன
உழையுடையான் உள்ளிருந்து
 உளோம்போகீர் என்றானே
 				- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 பிழையுளன பொறுத்திடுவர்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க