தொண்டை நாடு - திருவக்கரை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 120 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 81 கி.மீ., செங்கல்பட்டு வந்து அங்கிருந்து திண்டிவனம் கடந்து கூட்டேரிப்பட்டு என்னும் இடத்தில் இடப்பக்கம் செல்லும் சாலையில் 25 கி.மீ. செல்லவேண்டும். திருச்சியிலிருந்து 224 கி.மீ., மதுரையிலிருந்து 384 கி.மீ.,
வரிசை எண் : 30
சிறப்பு : கல் மரங்களை இங்கே காணலாம். வக்கிரன் வழிபட்ட தலம்
இறைவன் : சந்திரசேகரேஸ்வரர்
இறைவி : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை & அஞ்சல் – 604 304 வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04143-2688949

இருப்பிட வரைபடம்


கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்தலையிற் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிராந் ஒலியார் கழல் உள்குதுமே.
	 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 கறையணி மாமிடற்றான்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க