தொண்டை நாடு - (வட) திருமுல்லைவாயில்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. (பூவிருந்தவல்லி – அம்பத்தூர் சாலையில் உள்ளது சென்னையிலிருந்து 20 கி.மீ. திருச்சியிலிருந்து 320 கி.மீ. மதுரையிலிருந்து 480 கி.மீ. சென்னையிலிருந்து வருபவர்கள் அம்பத்தூர் வந்து அங்கிருந்து வரவேண்டும்.
வரிசை எண் : 22
சிறப்பு : தொண்டைமான் எனும் அரசன் கட்டிய கோயில். இங்கு நந்தி திரும்பியிருக்கும்.
இறைவன் : மாசிலாமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்
இறைவி : கொடியிடைநாயகி
தலமரம் : முல்லை
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் & அஞ்சல் சென்னை – 609 113
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 044-26540706

இருப்பிட வரைபடம்


திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
    சீருடைக் கழல்கள் என்றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
    ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
    வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
    பாசுப தாபரஞ் சுடரே 
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 திருவும்மெய்ப் பொருளுஞ்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க