தொண்டை நாடு - திருக்கச்சூர் (கச்சூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 48 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 10 கி.மீ. சிங்கப்பெருமாள்கோயிலிலிருந்து 2 கி.மீ. திருச்சியிலிருந்து 281 கி.மீ. மதுரையிலிருந்து 431 கி.மீ., வரிசை எண் : 26 சிறப்பு : சுந்தரருக்கு இறைவன் பிச்சை ஏற்று விருந்து படைத்த தலம் இங்கே இரண்டு கோயில்கள் உள்ளன. அடிவாரக்கோயில், மலைக்கோயில் (ஆலக்கோயில்) இறைவன் : விருந்திட்டஈஸ்வரர், கச்சபேஸ்வரர், இறைவி : அஞ்சனாட்சியம்மை தலமரம் : ஆல் தீர்த்தம் : கூர்மதீர்த்தம் அடிவாரக்கோயில் (மருந்தீசர் கோயில்) இறைவன் : மருந்தீசர் இறைவி : இருள்நீக்கித்தாயார் தலமரம் : - தீர்த்தம் : - பாடல் : சுந்தரர் முகவரி : அருள்மிகு. மருந்தீசர் திருக்கோயில், திருக்கச்சூர் & அஞ்சல் - 603 204, (வழி) சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் நேரம் : காலை 08.00 – 11.30 மாலை 05.30 – 08.00 தொடர்புக்கு : 044-27463514

இருப்பிட வரைபடம்


முதுவாய் ஓரி கதற முதுகாட்
    டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
    மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
    கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே.
 			- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 முதுவாய் ஓரி கதற


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க