தொண்டை நாடு - திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 131 கி.மீ. (காஞ்சிபுரம் – ரேணிகுண்டா – ஸ்ரீகாளஹஸ்தி), சென்னையிலிருந்து 123 கி.மீ. திருச்சியிலிருந்து 431 கி.மீ. மதுரையிலிருந்து 591 கி.மீ.
வரிசை எண் : 19
சிறப்பு : சிலந்தி, பாம்பு, யானை வழிபட்ட தலம். கண்ணப்ப நாயனாருக்கு இறைவன் அருள் புரிந்த தலம்
இறைவன் : காளத்திநாதர்
இறைவி : ஞானப்பூங்கோதை
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பொன்முகலியாறு
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. காளத்தீஸ்வர்ர் திருக்கோயில், காளஹஸ்தி & அஞ்சல் – 517 644 சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00– இரவு 09.00
தொடர்புக்கு : 08578-222240, 09848220173

இருப்பிட வரைபடம்


மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான் 
    காளத்தியான் அவனென் கண்ணுளானே.
 			- திருநாவுக்கரசர்
பாடல் கேளுங்கள்
 மனத்தகத்தான்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க