தொண்டை நாடு - திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 98 கி.மீ. திண்டிவனத்திலிருந்து 19 கி.மீ., திண்டிவனத்திலிருந்து வரும்போது ஒழுந்தியாப்பட்டு கூட் ரோடு வந்ததும் இடப்பக்கம் செல்லும் சாலயில் 2 கி.மீ. சென்றால் கோயில். பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ., திருச்சியிலிருந்து 210 கி.மீ., மதுரையிலிருந்து 370 கி.மீ., வரிசை எண் : 31 சிறப்பு : வாமதேவர் வழிபட்ட தலம் இறைவன் : அரசிலிநாதர் இறைவி : பெரியநாயகி தலமரம் : அரசு தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம் பாடல் : சம்பந்தர் முகவரி : அருள்மிகு. அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாப்பட்டு & அஞ்சல் – 605 109 வானூர் (வழி) வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 08.30 ; மாலை 05.00 – 08.00 தொடர்புக்கு : 04147-295376, 9994476960

இருப்பிட வரைபடம்


பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனல் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோள்மேல்
ஆடல் மாசுண மசைத்த அடிகளுக்கிடம் அரசிலியே.
	 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பாடல் வண்டறை


Zoomable Image
<

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க