தொண்டை நாடு - திருவாலங்காடு

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 42 கி.மீ. சென்னையிலிருந்து 57 கி.மீ. திருச்சியிலிருந்து 342 கி.மீ. மதுரையிலிருந்து 502 கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று அரக்கோணம் – திருவள்ளூர் சாலையில் 12 கி. மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து வருபவர்கள் சென்னை – திருப்பதி சாலையில் வரலாம்.
வரிசை எண் : 15 சிறப்பு : காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து வந்த தலம். பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை
இறைவன் : வடஆரண்யேஸ்வரர்
இறைவி : வண்டார்குழலி
தலமரம் : பலா
தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வடஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு & அஞ்சல் – 631 210 (வழி) அரக்கோணம், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அஞ்சல் – 631 203, (வழி) திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 044-27872443, 9444039290

இருப்பிட வரைபடம்


ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே
    ஊழிதோறும் ஊழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
    நீர்வளிதீ ஆகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
    கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்களானார் தாமே
    திருவாலங்காடுறையுஞ் செல்வர் தாமே.
			- திருநாவுக்கரசர்
பாடல் கேளுங்கள்
 ஒன்றா உலகனைத்தும்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க