தொண்டை நாடு - திருவூறல் (தக்கோலம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ. சென்னையிலிருந்து 87 கி.மீ. திருச்சியிலிருந்து 322 கி.மீ. மதுரையிலிருந்து 487 கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் தக்கோலம் சந்திப்பு சாலை (கூட் ரோடு) வரை சென்று வலப்பக்கம் செல்லும் சாலையில் 5 கி. மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து வருபவர்கள் காஞ்சிபுரம் வெள்ளை கேட் வரை வந்து வலப்பக்கம் செல்லும் அரக்கோணம் சாலையில் வரலாம்.
வரிசை எண் : 12
சிறப்பு : தக்கன் தன் தலையை இழந்து ஓலமிட்ட தலம்
இறைவன் : ஜலநாதேஸ்வரர்
இறைவி : கிரிராஜகன்னிகை
தலமரம் : -
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் & அஞ்சல்- 631 151 அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 04177-246427, 9994786919

இருப்பிட வரைபடம்


மாறி லவுணர் அரணம் அவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரான் ஒலியார் கழல் உள்குதுமே
    		     - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மாறி லவுணர்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க