தொண்டை நாடு - திருவிற்கோலம் (கூவம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 42 கி.மீ. சென்னையிலிருந்து 63 கி.மீ. திருச்சியிலிருந்து 342 கி.மீ. மதுரையிலிருந்து 502 கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுங்குவார்சத்திரம் வரை சென்று இடப்பக்கம் செல்லும் சாலையில் (சுங்குவார்சத்திரம் – திருவள்ளூர் சாலை) 15 கி. மீ. செல்லவேண்டும். கூவம் சந்திப்புச் சாலயில் (கூவம் கூட்ரோடு) இறங்கி 1 கி.மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து வருபவர்கள் சுங்குவார்சத்திரத்தில் இறங்கி அங்கிருந்து வரலாம்.
வரிசை எண் : 14
சிறப்பு : இறைவன் மேரு மலையை வில்லாகப் பிடித்த தலம்
இறைவன் : திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : -
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல் – 631 203, (வழி) திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.00 ; மாலை 04.00 – 07.30
தொடர்புக்கு : 044-27651084, 9444607369

இருப்பிட வரைபடம்


உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற்கோலமே.
    		             - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 உருவினார் உமையொடும்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க