தொண்டை நாடு - கிளியன்னவூர் (கிளியனூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 90 கி.மீ. திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ., திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 10 கி.மீ. வரும்போது கிளியனூர் வந்ததும் இடப்பக்கம் சாலயில் அரை கி.மீ. சென்றால் கோயில். பாண்டிச்சேரியிலிருந்து 30 கி.மீ., திருச்சியிலிருந்து 225 கி.மீ., மதுரையிலிருந்து 385 கி.மீ.,
வரிசை எண் : 33
சிறப்பு : அகத்திய முனிவருக்கு அருள்பாலித்த தலம்
இறைவன் : அகத்தீஸ்வரர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர் & அஞ்சல் – 604 102 கிளியனூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 05.30 – 07.30
தொடர்புக்கு : 04147-235221

இருப்பிட வரைபடம்


தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே
	 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 தார் சிறக்கும்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க