தொண்டை நாடு - இரும்பைமாகாளம் (இரும்பை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 110 கி.மீ. திண்டிவனத்திலிருந்து 29 கி.மீ., திண்டிவனத்திலிருந்து வரும்போது திருச்சிற்றம்பலம் கூட் ரோடு தாண்டி இரும்பை கூட் ரோடு வந்ததும் இடப்பக்கம் செல்லும் சாலயில் 2 கி.மீ. சென்றால் கோயில். பாண்டிச்சேரியிலிருந்து 14 கி.மீ., திருச்சியிலிருந்து 220 கி.மீ., மதுரையிலிருந்து 390 கி.மீ.,
வரிசை எண் : 32
சிறப்பு : கடுவெளிச்சித்தர் கோபமாகப் பாடிய போது இறைவன் திருமேனி மூன்றாகப் பிளவுபட்டது
இறைவன் : மாகாளேஸ்வரர்
இறைவி : குயில்மொழியம்மை
தலமரம் : புன்னை
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை & அஞ்சல் – 605 010 ஆரோவில் (வழி) வானூர் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9443465502

இருப்பிட வரைபடம்


மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.
	 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மண்டுகங்கை


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க