தொண்டை நாடு - இலம்பையங்கோட்டூர் (எலுமியங்கோட்டுர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 38 கி.மீ. தக்கோலத்திலிருந்து 11 கி.மீ., சென்னையிலிருந்து 59 கி.மீ. திருச்சியிலிருந்து 338 கி.மீ. மதுரையிலிருந்து 498 கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுங்குவார்சத்திரம் வரை சென்று இடப்பக்கம் செல்லும் சாலையில் (சுங்குவார்சத்திரம் – செல்லம்பட்டிடை சாலை) 10 கி. மீ. செல்லவேண்டும். செல்லம்பட்டிடையிலிருந்து வலப்பக்கம் செல்லும் சாலயில் 1 கி.மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து வருபவர்கள் சுங்குவார்சத்திரத்தில் இறங்கி அங்கிருந்து வரலாம்.
வரிசை எண் : 13
சிறப்பு : சம்பந்தர் பெருமானுக்கு இறைவன் குழந்தை வடிவிலும், கிழவன் வடிவிலும், பசு வடிவிலும் காட்சி கொடுத்த தலம்
இறைவன் : அரம்பேஸ்வரர், சந்திரசேகர்
இறைவி : கனககுஜாம்பிகை, கோடேந்துமுலையம்மை
தலமரம் : மல்லிகை
தீர்த்தம் : மல்லிகைத் தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அரம்பேஸ்வரர் திருக்கோயில், இலம்பையங்கோட்டூர், கப்பாங்கோட்டுர் அஞ்சல் – 631 553, (வழி) எடையார்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04177-27692412, 9444865714

இருப்பிட வரைபடம்


பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டு
  வெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக் கனலெரி
  அங்கையில் ஏந்தியகடவுள்
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்
  குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏலநாறும்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் 
  பேணி என்னெழில் கொள்வதியல்பே. 
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பாலனாம்


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க