தொண்டை நாடு - அச்சிறுப்பாக்கம் (அச்சரப்பாக்கம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 77 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 39 கி.மீ., திருச்சியிலிருந்து 236 கி.மீ., மதுரையிலிருந்து 396 கி.மீ.,
வரிசை எண் : 29
சிறப்பு : இறைவனுடைய தேரின் அச்சு முறிந்த இடம், இரண்டு சந்நிதிகள்
இறைவன் : ஆட்சீஸ்வரர், பார்க்கபுரீஸ்வரர்
இறைவி : இளங்கிளியம்மை, சுந்தரநாயகி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : சங்கு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுப்பாக்கம் & அஞ்சல் – 603 301 மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்  நேரம் : காலை 06.30 – 11.30 ; மாலை 04.30 – 08.30
தொடர்புக்கு : 044-27523019, 9842309534

இருப்பிட வரைபடம்


பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடல்
  பவளமொடு அழல்நிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாய
  வெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்திரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லிய
  லாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிகள் 
  அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
	 		- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பொன்றிரண்டன்ன


Zoomable Image

தொண்டை நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க