4.இளையான்குடி மாற நாயனார்

அமைவிடம் : temple icon.ilayankudiyar
வரிசை எண் : 4
இறைவன்: இராசேந்திர சோழீஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : இளையான்குடி
முக்தி தலம் : இளையான்குடி
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி மகம்
வரலாறு : இளையான்குடி என்ற தலத்தில் வேளாள மரபில் அவதாரம் செய்த இந்த அடியார் தம் செல்வத்தையெல்லாம் சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பதில் செலவழித்தார். அனுதினமும் எதிர்ப்படும் அடியாரை அழைத்து வந்து அவர் திருவடியைச் சுத்தம் செய்து ஆசனத்தில் அமர்வித்து அறுசுவை உணவையும் பரிமாறுவார். சில காலம் கழித்து அவர்தம் செல்வம் சிவனருளால் குறைய ஆரம்பித்து வறுமை நிலைமைக்கு வந்தார். இவர்தம் சிவத்தொண்டின் பெருமையினை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் ஒரு மழைக்காலத்தில் நாயனார் வீடு தேடி வருகிறார். நள்ளிரவில் வந்த அவரை நாயனார் வரவேற்று அமர வைக்கிறார். புதிய ஆடைகளையும் தருகிறார். இல்லத்தில் அவரைப் பசியாற்றுவதற்கு ஏதுமில்லை. மனைவியுடன் கலந்தாலோசித்த நாயனார் அன்று காலை தம் வயலில் தூவிய நெல்லை அலைந்து வாரிக்கொண்டு வருகிறார்.அடுப்பை எரிக்க தம் வீட்டின் கூரைக் கழியையே பயன்படுத்தி அவர் மனைவி உண்டி சமைக்கிறார். வீட்டின் பின்புறத்தில் விளைந்திருந்த கீரைகளைக் கொண்டு கறி சமைத்து அடியாருக்கு அன்னம் படைக்க அவரை அழைப்பதற்கு வெளியே வந்து பார்க்கின்றனர். அடியாரைக் காணவில்லை. இறைவன் உமையோடு விடை மீது காட்சி அளித்தான்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. மு.சு. முருகேசன், டிரஸ்டி
42. மாற நாயனார் தெரு
இளையான்குடி - 630702
தொலைபேசி : 9361017083

இருப்பிட வரைபடம்


கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே 
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின் 
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா 
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்
- பெ. பு. 443

    	           
பாடல் கேளுங்கள்
 கொண்டு வந்துView Nayanmar thala vazipadu in a larger map
நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க