banner
கொங்கு நாடு - வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாக்கூடலூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 490 கி.மீ., கரூரிலிருந்து 21 கி.மீ., கரூர் வந்து அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ. சென்று சீத்தப்பட்டி பிரிவில் இடப்பக்கம் செல்லும் சாலையில் 8 கி.மீ செல்லவேண்டும். சாலை ஓரத்திலேயே கோயில். ஈரோட்டிலிருந்து 90 கி.மீ., சென்னையிலிருந்து 490 கி.மீ., திருச்சியிலிருந்து 230 கி.மீ. மதுரையிலிருந்து 290 கி.மீ.
வரிசை எண் : 263
சிறப்பு : வெஞ்சமன் என்னும் மன்னன் ஆண்டதாலும் சிற்றாறு அமராவதி நதியுடன் கூடுமிடம் என்பதாலும் வெஞ்சமாக்கூடல் என்ற பெயராயிற்று.
இறைவன் : கல்யாணவிகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்
இறைவி : மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
தலமரம் : -
தீர்த்தம் : குடகனாறு
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. விகிர்தநாதேஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாக்கூடலூர் & அஞ்சல் – 639 109 (வழி) மூலப்பட்டி, அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 ; மாலை 04.00
தொடர்புக்கு : 04320-238442

இருப்பிட வரைபடம்


பண்ணேர் மொழியாளை ஓர் பங்குடையாய்
படுகாட்டகத்து என்றும்  ஓர் பற்றொழியாய்
தண்ணார் அகிலும் நல சாமரையும்
அலைத்து எற்று சிற்றாறு அதன்கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவும் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணி அரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே 
    		             - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 பண்ணேர் மொழியாளை


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க