banner
கொங்கு நாடு - திருமுருகன்பூண்டி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 478 கி.மீ., அவிநாசியிலிருந்து 5 கி.மீ., திருப்பூரிலிருந்து 12 கி.மீ., ஈரோட்டிலிருந்து 38 கி.மீ., கோவையிலிருந்து 42 கி.மீ., சேலத்திலிருந்து 120 கி.மீ., சென்னையிலிருந்து 454 கி.மீ., திருச்சியிலிருந்து 198 கி.மீ. மதுரையிலிருந்து 268 கி.மீ.
வரிசை எண் : 260
சிறப்பு : முருகப்பெருமான் வழிபட்டத் தலம். இந்தத் தலத்திற்கு சுந்தரர் வந்தபோது அவர் கொண்டுவந்திருந்த பொருட்களையெல்லாம் இறைவன் பூத கணங்களை கள்வர் வேடத்தில் அனுப்பிக் கவர்ந்துகொள்கிறார். பின்னர் சுந்தரர் பதிகம் பாடி அவற்றை மீட்கிறார்.
இறைவன் : முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி
இறைவி : முயங்குபூண்முலையம்மை, மங்களாம்பிகை
தலமரம் : குருக்கத்தி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. முருகநாதேஸ்வரர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி & அஞ்சல் – 641 652. அவிநாசி வட்டம், கோவை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 01.00 ; மாலை 03.30 – 08.00
தொடர்புக்கு : 04296-273507, 9443459074

இருப்பிட வரைபடம்


கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறைலைக்குமிடம்
முடுகுநாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீர் எம்பிரானீரே.
    		             - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 கொடுகு வெஞ்சிலை


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க