banner
கொங்கு நாடு - கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 443 கி.மீ., ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., சென்னையிலிருந்து 418 கி.மீ., திருச்சியிலிருந்து 159 கி.மீ. மதுரையிலிருந்து 223 கி.மீ.
வரிசை எண் : 262
சிறப்பு : முருகப்பெருமானுக்கு உகந்த தலம். கோயில் மலை மீது உள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு நாகம் படுத்திருப்பது போல் இந்த் மலை காட்சி அளிப்பதால் இதற்கு நாகாசல மலை என்று ஒரு பெயர் உண்டு. இத்தலத்து முருகனைக் காண நாலாயிரம் கண்களும் போதாது என்பார். அருணகிரிநாதர். மலை செந்நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர். 1200 படிகள் கொண்ட மலை. மூலவர் அர்த்தநாரீஸ்வரர். சுயம்பு. இறைவனின் திருவடியில் எப்போதும் தீர்த்தம் சுரந்து கொண்டே இருக்கும். குருக்கள் எடுத்துக் கொடுப்பார். அர்த்தநாரீஸ்வரர் திருமேனி மிக அழகு. இங்கு மரகத இலிங்கம் உள்ளது. அம்பாள் பூசித்ததாக வரலாறு.
இறைவன் : அர்தநாரீஸ்வரர்
இறைவி : பாகம்பிரியாள்
தலமரம் : இலுப்பை
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. அர்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு & அஞ்சல் – 637 211 நாமக்கல் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 ; மாலை 06.00
தொடர்புக்கு : 04288-255925, 9362023163, 9362022900

இருப்பிட வரைபடம்


அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 அவ்வினை


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க