banner
கொங்கு நாடு - திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 464 கி.மீ., கரூரிலிருந்து 28 கி.மீ., ஈரோட்டிலிருந்து 39 கி.மீ., சென்னையிலிருந்து 439 கி.மீ., திருச்சியிலிருந்து 180 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 264
சிறப்பு : ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் மேரு மலையின் சிகரங்களில் ஒன்று ஐந்து மணிகளாகச் சிதறியது. சிவப்பு மணி திருவண்ணாமலையாகவும், மரகத மணி ஈங்கோய் மலையாகவும், மாணிக்க மணி திருவாட்போக்கியாகவும்(ஐயர் மலை), நீல மணி பொதிகையாகவும், வைர மணி கொடுமுடியாகவும் ஆயின என்பது வரலாறு. இலிங்கம் சிகர வடிவில் உள்ளதைக் காணலாம். பாண்டிய மன்னனின் குறை தீர்ந்ததால் இது பாண்டிக்கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மும்மூர்த்தி தலம். இங்குள்ள நடராஜர் திருவடியில் முயலகன் இல்லை.
இறைவன் : மகுடேஸ்வரர், கொடுமுடிநாதர்
இறைவி : மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி & அஞ்சல் – 638 151 ஈரோடு மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 - 12.00 ; மாலை 03.00 - 08.00
தொடர்புக்கு : 04320-238442

இருப்பிட வரைபடம்


மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப்பாதமே மனம்பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரிற் பாண்டிக்கொடுமுடி
நற்றவா உனை நான்மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே
    		             - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 மற்றுப் பற்றென


Zoomable Image /div>

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க