banner
கொங்கு நாடு - கருவூர் (கரூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 493 கி.மீ., ஈரோட்டிலிருந்து 68 கி.மீ., சென்னையிலிருந்து 468 கி.மீ., திருச்சியிலிருந்து 213 கி.மீ. மதுரையிலிருந்து 272 கி.மீ.
வரிசை எண் : 265
சிறப்பு : ஊருக்கு கரூர் என்றும் கோயிலுக்கு ஆநிலை என்றும் பெயர். காமதேனு வழிபட்ட தலம். புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட தலம். எறிபத்த நாயனார் அவதாரத்தலம். சிவகாமியாண்டார் தொண்டு செய்த தலம் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேரின் அவதாரத்தலம். மூலவர் சுயம்பு. மூலவர் சிறிது சாய்வாக உள்ளார். கருவூர்த்தேவருக்காக சாய்ந்தார் என்பது வரலாறு.
இறைவன் : பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்
இறைவி : கிருபாநாயகி, சௌந்தர்யநாயகி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அமராவதி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் – 639 001. கரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 - 12.30 ; மாலை 04.00 - 08.30
தொடர்புக்கு : 04324-262010, 9994012627

இருப்பிட வரைபடம்


பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்
பெண்ணினார் பிறைதாங்கு நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆனிலை
நண்ணினார் நமை ஆளுநாதரே
    		             - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பண்ணினார்


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க