banner
கொங்கு நாடு - திருநணா (பவானி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 410 கி.மீ., ஈரோட்டிலிருந்து 12 கி.மீ., திருப்பூரிலிருந்து 62 கி.மீ., கோவையிலிருந்து 112 கி.மீ., சேலத்திலிருந்து 72 கி.மீ., சென்னையிலிருந்து 408 கி.மீ., திருச்சியிலிருந்து 153 கி.மீ. மதுரையிலிருந்து 274 கி.மீ.
வரிசை எண் : 261
சிறப்பு : பவானி நதி காவிரியோடு கூடும் இடம். கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் கோவை மாவட்ட ஆட்சியளராக இருந்த திரு. காரோ என்பவரை இத்தலத்து அம்பாள் வேதாம்பிகை ஒரு குழந்தை வடிவில் வந்து காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக அவர் அம்பாளுக்குத் தந்ததினாலான ஊஞ்சல் ஒன்றை அளித்துள்ளார். ஒரு நாள் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தபோது அம்பாள் குழந்தை வடிவில் வந்து இவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்தது. அவர் வெளியே வந்தவுடன் அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. குழந்தையின் பின்னே வந்த காரோ கோயில் வரை வந்ததும் அந்த குழந்தை மறைந்ததைக் கண்டார். வந்தது அம்பாள் என்று உணர்ந்தார்.
இறைவன் : சங்கமேஸ்வரர்
இறைவி : வேதாம்பிகை
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : பவானி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி & அஞ்சல் – 638 301 ஈரோடு மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 – 01.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0424-230192

இருப்பிட வரைபடம்


பந்தார் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறதேறி
அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாங்கனி உதிர்க்கும் திருநணாவே. 
    		             - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
  பந்தார் விரல்


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க