banner
கொங்கு நாடு - திருப்புக்கொளியூர் (அவிநாசி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 481 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து (அரக்கோணம் வழியாக) ஈரோடு அல்லது திருப்பூர் வரை இரயிலில் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் வரலாம். திருப்பூரிலிருந்து 14 கி.மீ., ஈரோட்டிலிருந்து 40 கி.மீ., கோவையிலிருந்து 40 கி.மீ., சேலத்திலிருந்து 122 கி.மீ., சென்னையிலிருந்து 456 கி.மீ., திருச்சியிலிருந்து 200 கி.மீ. மதுரையிலிருந்து 270 கி.மீ.
வரிசை எண் : 259
சிறப்பு : ஊரின் பெயர் புக்கொளியூர். இறைவன் பெயர் அவினாசி. பழைய பெயர் மறைந்து தற்போது இறைவன் திருநாமமே ஊரின் பெயராக மாறியுள்ளது. முதலை விழுங்கிய பாலகனை பல ஆண்டுகள் கழித்து சுந்தரர் மீட்ட தலம். கோயிலின் எதிரே உள்ள கல் கொடிக்கம்பத்தின் அடியில் சுந்தரர் மற்றும் பிள்ளையை வெளிப்படுத்தும் முதலையின் கல் சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் முதலை பாலகனை உண்ட ஏரி உள்ளது.
இறைவன் : அவிநாசிலிங்கேஸ்வரர், அவிநாசிநாதர்
இறைவி : கருணாம்பிகை, பெருங்கருணைநாயகி
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : காசிக்கிணறு, ஐராவத தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில், அவிநாசி & அஞ்சல் ,அவிநாசி வட்டம், கோவை மாவட்டம் – 641 654
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04296-273113

இருப்பிட வரைபடம்


உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப்புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே.
    		             - சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 உரைப்பார் உரை உகந்து


Zoomable Image

கொங்கு நாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க