banner
திருப்பனந்தாள்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 225 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சாலையில் ஆடுதுறை வந்து அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் கோயில். பண்ருட்டி, சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம் சாலையில் வந்தும் வரலாம். செங்கல்பட்டிலிருந்து 212 கி.மீ., சென்னையிலிருந்து 267 கி.மீ. திருச்சியிலிருந்து 104 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 93
சிறப்பு : தாடகை பூசித்த்தால் தாடகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. தாடகை என்னும் பெண் புத்திரப்பேறு வேண்டி இத்தலத்து இறைவனை வழிபாடு செய்து வருகையில் ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது ஆடை நெகிழ அதனால் மாலை சாத்த முடியாமல் வருந்த இறைவன் தன் திருமுடியைச் சற்று சாய்த்து அம்மாலையை ஏற்றருளினார். அப்படிச் சாய்துபோன இறைவனைப் பின்னர் குங்கிலிக்கலய நாயனார் வந்து நேராக்கினார் என்பது வரலாறு. பதினாறுகால் மண்டபத்தில் தல வரலாற்றுச் சிற்பங்கள் உள்ளன.
இறைவன்: செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி, தாலவனேஸ்வரி
தலமரம் : பனை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. தாலவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பனந்தாள் & அஞ்சல் – 612 504. கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை07.30 – 12.00 ;மாலை 04.00 – 09.30
தொடர்புக்கு : 0435-2456422, 9443116322

இருப்பிட வரைபடம்


கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலோர் வெண்மழுவாள்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடைமால் விடையான்
விண்பொலி மாமதிசேர் திருசெஞ்சடை வேதியனூர்
தண்பொலி சூழ்பனந்தாள் திருத்தாடகையீச்சரமே 
 	 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 கண்பொலி நெற்றியினான்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க