banner
திருநீடூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 250 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 8 கி.மீ சென்றால் சாலையின் ஓரத்தில் திருக்கோயில். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வரும்போது திருப்பனந்தாள் சாலையில் பட்டவர்த்தி என்னும் இடம் வந்து இடப்புறம் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலம் அடையலாம். செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 260 கி.மீ.
வரிசை எண் : 75
சிறப்பு :ஊழிக்காலத்திலும் அழியாது நிலைத்து இருந்ததனால் நீடூர் எனப்பட்டது.
இறைவன்: அருள்சோமநாதேஸ்வரர்
இறைவி : ஆதித்ய அபயப்ராதாம்பிகை, வேதநாயகி, வேயுறுதோளியம்மை
தலமரம் : மகிழமரம்
தீர்த்தம் :
பாடல் : அப்பர், சுந்தரர்
முகவரி :அருள்மிகு. அருள்சோமநாதேஸ்வரர் திருக்கோயில்,நீடூர் & அஞ்சல் – 609 203. மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.30 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04364-250142

இருப்பிட வரைபடம்


கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக்
கடுநரகம் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானேயாகிப்
பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிலையார் மணிமாட நீடூரானை
நீதனேன் என்னே நான் நினையாவாறே 
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 கலைஞானம் கல்லாமே


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க