அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 215 கி.மீ., சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் 15 கி.மீ.
பிரதான சாலையிலிருந்து இடப்புறம் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து
205 கி.மீ., சென்னையிலிருந்து 255 கி.மீ. திருச்சியிலிருந்து 115 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 87
சிறப்பு : நம்பியாண்டார்நம்பியின் அவதாரத்தலம். திருமுறைகள் நமக்குக் கிடைப்பதற்குக் காரணமாயிருந்த
பொல்லாப்பிள்ளையார் அருள்பாலிக்கும் தலம். நாரை வழிபட்ட தலம். பொல்லாப்பிள்ளையாரின் சந்நிதியில்
திருமுறைக் கிடைத்த வரலாற்றினை விளக்கும் சித்திரங்கள் உள்ளன.
இறைவன்: சௌந்தரநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : புன்னாகம்
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சௌந்தரநாதசுவாமி திருக்கோயில், திருநாரையூர் & அஞ்சல் – 608 303. (வழி) லால் பேட்டை,
காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30 ;மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 04144-208879
இருப்பிட வரைபடம்
|