அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 268 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சாலையில் ஆடுதுறை
வந்து அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 230 கி.மீ., சென்னையிலிருந்து
285 கி.மீ. திருச்சியிலிருந்து 111 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 92
சிறப்பு : சோழ நாட்டு மந்திரி ஒருவன் அரசாங்கப் பணத்தில் கோயில் கட்டினான். அரசன் சினமுற்று அவனைச்
சிரச்சேதம் செய்தான். மந்திரியின் மனைவி இந்த அம்பாளிடம் வேண்ட அம்பாள் மந்திரியை உயிர்ப்பித்தாள்.
திருமணத் தடை உள்ளவர்களுக்குப் பரிகாரத்தலம். இத்தலத்தை வழிபட்ட பின்னரே சூரியனார்கோயில்
சென்று வழிபடவேண்டும் என்பது மரபாக உள்ளது.
இறைவன்: பிராணவரதேஸ்வரர்
இறைவி : மங்களநாயகி
தலமரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : காவிரி
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பிராணவரதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி & அஞ்சல் – 612 102.
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.30 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 0435-2472767
இருப்பிட வரைபடம்
|