banner
திருக்குறுக்கை (கொருக்கை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 256 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் நீடூர் தாண்டி கொண்டல் என்னும் ஊரை அடைந்து இடப்புறம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 276 கி.மீ., சென்னையிலிருந்து 326 கி.மீ. திருச்சியிலிருந்து 133 கி.மீ. மதுரையிலிருந்து 264 கி.மீ.
வரிசை எண் : 80
சிறப்பு : அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. மன்மதனை எரித்த தலம். குறுங்கை என்னும் முனிவர் வழிபட்டதால் குறுக்கை என்றழைக்கப்பட்டது. கோயிலுக்கு அருகாமையில் வயல்வெளியில் விபூதிக்குட்டை என்று ஒன்று உள்ளது. காமனை எரித்த இடம் இது என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் மணல் வெண்மையாக விபூதியாகவே உள்ளதைக் காணலாம். வேலியிட்டு இது பாதுகாக்கப்படுகிறது.
இறைவன்: வீரட்டேஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : கடுக்கா
தீர்த்தம் : சூல தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொறுக்கை, நீடுர் & அஞ்சல் – 609 203 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 4.00 – 08.00
தொடர்புக்கு : 9443527044

இருப்பிட வரைபடம்


சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர்செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக்
கலந்த நீர்க்காவிரி சூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே 
					 - அப்பர
பாடல் கேளுங்கள்
 சிலந்தியும் ஆனைக்காவில்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க