banner
திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு, மேலைக்காழி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 235 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் தலைஞாயிறு என்னும் கைகாட்டி உள்ள இட்த்தில் வலப்புறம் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 223 கி.மீ., சென்னையிலிருந்து 273 கி.மீ. திருச்சியிலிருந்து 149 கி.மீ. மதுரையிலிருந்து 269 கி.மீ.
வரிசை எண் : 81
சிறப்பு : இது ஒரு கொகுடிக்கோயில். மீண்டும் கருவில் உருவாகும் நிலையை அழிக்கும் தலமாதலால் கருப்பறியலூர் என வழங்கலாயிற்று. சூரியன் வழிபட்ட தலம். இந்திரன் செய்த தவற்றைப் பொறுத்து அருளியதால் இறைவற்கு குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயரும் உண்டு. சீர்காழியில் இருப்பது போல் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.
இறைவன்: குற்றம் பொறுத்த நாதர்
இறைவி : கோல்வளைநாயகி
தலமரம் : கொகுடிமுல்லை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு & அஞ்சல் – 609 201. (வழி) இளந்தோப்பு மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ;மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 04364-203678, 9443190169

இருப்பிட வரைபடம்


வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதனென நள்ளிருள் முன் ஆடுகுழைதாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே 
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 வேதமொடு வேதியர்கள்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க