banner
திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 228 கி.மீ., திருப்பனந்தாளிலிருந்து கும்பகோணம் சாலையில் 3 கி.மீ. சென்றால் கோயில். பிரதான சாலையிலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 215 கி.மீ., சென்னையிலிருந்து 270 கி.மீ. திருச்சியிலிருந்து 107 கி.மீ. மதுரையிலிருந்து 238 கி.மீ.
வரிசை எண் : 94
சிறப்பு : சண்டேஸ்வரர் வழிபட்ட தலம்.
இறைவன்: பாலுகந்தநாதர், பாலுந்த ஈஸ்வரர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் :
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள் & அஞ்சல் – 612 504. திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 09.00 ;மாலை 05.00 – 06.00
தொடர்புக்கு : 9442167104

இருப்பிட வரைபடம்


உள்ளுமாய்ப் புறமுமாகி உருவுமாய் அருவுமாகி
வெள்ளமாய்க் கரையுமாகி விரிகதிர் ஞாயிறாகிக்
கள்ளமாய்க் கள்ளத்துள்ளார் கருத்துமாய் அருத்தமாகி
அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே 
 	 						- அப்பர்
பாடல் கேளுங்கள்
 உள்ளுமாய்ப் புறமுமாகி


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க