அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 253 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாக மணல்மேடு வந்து அங்கிருந்து
இடப்புறம் செல்லும் திருப்பனந்தாள் சாலையில் 9 கி.மீ. சென்று கோயிலை அடையலாம். செங்கல்பட்டிலிருந்து
273 கி.மீ., சென்னையிலிருந்து 323 கி.மீ. திருச்சியிலிருந்து 131 கி.மீ. மதுரையிலிருந்து 251 கி.மீ.
வரிசை எண் : 89
சிறப்பு : அம்பிகை ஆடிய பந்து வந்து அணைந்த தலம் ஆதலால் பந்தணைநல்லூர் என்றானது. அம்பாள் பந்து
விளையாடிக்கொண்டு இருந்ததால் அதற்கு இடையூறு உண்டாகாதவாறு சூரியன் அஸ்தமனம் ஆகாமல்
இருந்தான். அதனால் கோபமுற்ற இறைவன் அம்பாளை பசுவாக மாறுமாறு சபித்தார். பசு உருவில்
அம்பாள் இறைவனைப் பால் சொரிந்து வழிபட சாபவிமோசனம் ஆனது. மூலவர் சுயம்பு.
இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி : வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர் & அஞ்சல் – 608 807.
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2450595
இருப்பிட வரைபடம்
| |