banner
பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 247 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 20 கி.மீ. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு என்னும் இடம் வந்து அங்கிருந்து 8 கி.மீ தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 235 கி.மீ., சென்னையிலிருந்து 285 கி.மீ. திருச்சியிலிருந்து 161 கி.மீ. மதுரையிலிருந்து 281 கி.மீ.
வரிசை எண் : 84
சிறப்பு : பாண்டவர்கள் சித்திரா பௌர்ணமியன்று வந்து இங்கு பூசித்ததாக வரலாறு. அவர்கள் பூசித்த ஐந்து இலிங்கங்கள் இங்கு தனி சந்நிதிகளாக உள்ளன. தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர், பீமன் வழிபட்டது மகதீஸ்வரர், அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர், நகுலன் வழிபட்டது பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டது முத்தீஸ்வரர். திரெளபதி வழிபட்ட விநாயகர் உள்ளார்.
இறைவன் : நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், மகதீஸ்வரர், பரமேஸ்வரர், படிக்கரைநாதர்
இறைவி : அமிர்தகரவல்லி, மங்களநாயகி
தலமரம் : இலுப்பை
தீர்த்தம் : பிரம தீர்த்தம், அமிர்த்தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைப்பட்டு, மணல்மேடு அஞ்சல் – 609 202. மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ; மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 9245619738, 9976217869

இருப்பிட வரைபடம்


முன்னவன் எங்கள் பிரான்முதல் காண்பரிதாயபிரான்
சென்னியில் எங்கள் பிரான் திருநீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே 
							- சுந்தரர்s
பாடல் கேளுங்கள்
முன்னவன் எங்கள்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க