banner
ஓமாம்புலியூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 238 கி.மீ., சிதம்பரம் வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து 8 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 228 கி.மீ., சென்னையிலிருந்து 278 கி.மீ. திருச்சியிலிருந்து 154 கி.மீ. மதுரையிலிருந்து 274 கி.மீ.
வரிசை எண் : 85
சிறப்பு : அம்பாளுக்கு இறைவன் ஓம் என்ற பிரணவத்தின் பொருளை உபதேசித்த தலம். ஓம்+ஆம்+புலியூர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் அழகு. உயர்ந்த பீடத்தில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
இறைவன் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர்
இறைவி : புஷ்பலதாம்பிகை, பூங்கொடிநாயகி
தலமரம் : இலந்தை
தீர்த்தம் : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. துயர்தீர்த்தநாதர் திருக்கோயில், (பிரணவபுரீஸ்வரர் கோயில்), ஓமாம்புலியூர் & அஞ்சல் – 608 306 காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ; மாலை 05.30 – 07.30
தொடர்புக் : 04144-264845

இருப்பிட வரைபடம்


அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்தன்னை
ஆராத இன்னமுதை அடியார்தம்மேல்
வருந்துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியை என்மருந்து தன்னைப்
பொருந்து புனல் தழுவு அயல்நிலவு துங்கப்
பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திருவடதளியெம் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே
				- அப்பர்
பாடல் கேளுங்கள்
அருந்தவத்தோர் தொழுது


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க