banner
சோழநாடு - குடவாயில் (குடவாசல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 287 கி.மீ. திருவாரூரிலிருந்து 25 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 285 கி.மீ., சென்னையிலிருந்து 330 கி.மீ. திருச்சியிலிருந்து 140 கி.மீ. மதுரையிலிருந்து 292 கி.மீ.
வரிசை எண் : 211
சிறப்பு : மாடக்கோயில். குடத்திலிட்டு உயிகளைக் காத்துப் பின் படைக்கும் காலத்து வெளிப்படுத்தியபோது அக்குடம் மூன்றாக உடைந்து அடிப்பாகம் விழுந்த இடம் குடமூக்கு (கும்பகோணம்). நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர். முகப்பு பாகம் விழுந்த இடம் குடவாயில். புறநானூற்றில் இத்தலம் இடம்பெற்றிருக்கிறது. கோட்செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்று அவனைச் சிறை வைத்த இடம். அகநானூற்றுச் செய்தி மூலம் சோழர்களின் கருவூல நிலையமாக இவ்வூர் இருந்தது என அறிய முடிகிறது. சண்டேஸ்வரர் தனிக்கோயில்.
இறைவன் : கோணேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் & அஞ்சல் – 612 601 குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 9443959839

இருப்பிட வரைபடம்


பொன்னொப்பவனும் புயலொப்பவனும்
தன்னொப்பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே 
       - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
பொன்னொப்பவனும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க