banner
சோழநாடு - கொண்டீச்சரம் (திருக்கண்டீஸ்வரம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 231 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சன்னாநல்லூர் வந்து வலப்புறம் செல்லும் நன்னிலம் சாலையில் தூத்துக்குடி என்னும் இடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 232 கி.மீ., சென்னையிலிருந்து 272 கி.மீ. திருச்சியிலிருந்து 88 கி.மீ. மதுரையிலிருந்து 259 கி.மீ.
வரிசை எண் : 189
சிறப்பு : காமதேனு வழிபட்ட தலம். உமை பசு வடிவில் தன் கொம்பால் பூமியைக் கிளறியவாறே இத் தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டாள். பசுவின் கொம்பு பட்டதால் இறைவன் மீது வெட்டு பட்ட தழும்பு உள்ளது.
இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி : சாந்தநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டீஸ்வரம், (வழி) சன்னாநல்லூர் தூத்துக்குடி அஞ்சல் – 609 504 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9443038854

இருப்பிட வரைபடம்


பாலனாய்க் கழிந்தநாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்தநாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்துளானே - அப்பர்
பாடல் கேளுங்கள்
 பாலனாய்க் கழிந்தநாளும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க