banner
கஞ்சனூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 261 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கல்லணை சாலையில் அஞ்சவார்த்தலை வந்து வலப்புறம் பிரியும் கும்பகோணம் சாலையில் கதிராமங்கலம் வந்து திருக்கோடிக்காவல் தாண்டி கஞ்சனூர் வரவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 224 கி.மீ., சென்னையிலிருந்து 278 கி.மீ. திருச்சியிலிருந்து 104 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 90
சிறப்பு : மானக் கஞ்சாற நாயனார் அவதாரத்தலம். பிரமனுக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலம்.
இறைவன் : அக்னீஸ்வரர்
இறைவி : கற்பகாம்பிகை
தலமரம் : பலாச மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் & அஞ்சல் – 609 804. (வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 05.00
தொடர்புக்கு : 0435-2473737, 0435-2470155

இருப்பிட வரைபடம்


மூவிலை நற்சூலம் வலனேந்தினானை
மூன்று சுடர்க்கண்ணானை மூர்த்திதன்னை
நாவலனை நரைவிடை ஒன்று ஏறுவானை
நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
ஆனிலைந்து உகந்தானை அமரர் கோவை
அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்
காவலனைக் கஞ்சனூராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே 
 				- அப்பர்
பாடல் கேளுங்கள்
 மூவிலை நற்சூலம்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க