banner
கானாட்டுமுள்ளூர் (கானாட்டம்புலியூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 242 கி.மீ., சிதம்பரம் வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து 12 கி.மீ. ஓமாம்புலியூர் செல்லும் சாலயில் மோவூர் சென்று, அந்தச் சாலையில் முட்டம் செல்லும் பாதையில் 3 கி.மீ. சென்று இடப்புறம் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 228 கி.மீ., சென்னையிலிருந்து 278 கி.மீ. திருச்சியிலிருந்து 154 கி.மீ. மதுரையிலிருந்து 274 கி.மீ.
வரிசை எண் : 86
சிறப்பு :
இறைவன் : பதஞ்சலிநாதர்
இறைவி : கானார்குழலி, கோள்வளைக்கையாள்
தலமரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பதஞ்சலிநாதர் திருக்கோயில், கானாட்டம்புலியூர், (வழி) ஆயங்குடி, முட்டம் அஞ்சல் – 608 306. காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 08.00 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 04144-208091

இருப்பிட வரைபடம்


அருமணியை முத்தினை ஆன்அஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறல் இருந்தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழிந்திழியும் திரைவாய்க்
கோள்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே 
					- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 அருமணியை


Zoomable Image

View KADUVAIKARAIPUTHUR in a larger map
சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க