banner
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 270 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சாலையில் குத்தாலம் வந்து அங்கிருந்து அஞ்சார்வார்த்தலை என்னும் ஊர் வந்து வாய்க்கால் பாலம் தாண்டி வலப்புறம் செல்லும் சாலையில் சென்றால் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து 281 கி.மீ., சென்னையிலிருந்து 331 கி.மீ. திருச்சியிலிருந்து 149 கி.மீ. மதுரையிலிருந்து 281 கி.மீ.
வரிசை எண் : 78
சிறப்பு : சிவபெருமான் திருமணக்கோலத்துடன் வந்த அடியாரை எதிர்கொண்டு அழைத்த தலம்.
இறைவன் : ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்
இறைவி : சுகுந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல்மாது
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி அஞ்சல் – 609 813 மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் (வழி), நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04364-234223, 9442902785

இருப்பிட வரைபடம்


மத்தயானை ஏறி மன்னர்சூழ வருவீர்காள்
செத்தபோதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த வுள்ளமாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடிப் பரம்பொருளே 
				- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 மத்தயானை ஏறி


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க