banner
சோழநாடு - வேட்டக்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 265 கி.மீ. தரங்கம்பாடி – நாகை சாலையில் வரிச்சிக்குடி கிராமம் சென்று அங்கிருந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் 2 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 223 கி.மீ., சென்னையிலிருந்து 309 கி.மீ. திருச்சியிலிருந்து 183 கி.மீ. மதுரையிலிருந்து 313 கி.மீ.
வரிசை எண் : 166
சிறப்பு : மூலவர் சற்று உயரமான நிலையில் உள்ளார். வேடனாகவும் வேடுவச்சியாகவும் இறைவனும் இறைவியும் இத்தலத்தில் உள்ளதாக வரலாறு.
இறைவன்: சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்
இறைவி : சௌந்தரநாயகி, சாந்தநாயகி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, வழி – கோட்டுச்சேர், வச்சிகுடி அஞ்சல் – 609 610 காரைக்கால் வட்டம், புதுவை மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04368-265691

இருப்பிட வரைபடம்


தோத்திர மாமணலிங்கம் தொடங்கி ஆனிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
அந்தமென மறை நால்வர்க்கு அறம்புரி நூலொன்று உரைத்த
தீர்த்தமல்கு சடையாரும் திருவேட்டக்குடியாரே
பாடல் கேளுங்கள்
 தோத்திர மாமணலிங்கம்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க