அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 258 கி.மீ. திருவாவடுதுறை,
ஆடுதுறை, திருநீலக்குடி, எஸ். புதூர் வழியாக வடமட்டம் வந்து அங்கிருந்து 4 கி.மீ. வரவேண்டும். செங்கல்பட்டிலிருந்து
278 கி.மீ., சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து 118 கி.மீ. மதுரையிலிருந்து 248 கி.மீ.
வரிசை எண் : 179
சிறப்பு : தக்கன் வேள்வியில் பங்குகொண்ட சாபம் தீர அக்கினி வழிபட்ட தலம். வன்னி என்றால் அக்கினி. வன்னி வழிபட்ட
தலமாதலின் வன்னியூர் ஆனது. இத்தலத்து தீர்த்தத்தில் நீராடினால் இரத்தக் கொதிப்பு நோய் நீங்கும் என்பது வரலாறு.
இறைவன்: அக்கினிபுரீஸ்வரர், அக்னீஸ்வரர்
இறைவி : கௌரி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. அக்கினிபுரீஸ்வரர் திருக்கோயில்,
அன்னியூர் & அஞ்சல் – 612 201
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2449578
இருப்பிட வரைபடம்
|