banner
சோழநாடு - வலிவலம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் தேவூர் வழியாக செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 238
சிறப்பு : கரிக்குருவி (வலியன்) பூசித்த தலம். அதனால் வலிவலம் என்றானது. இது ஒரு மாடக்கோயில். பிடியதன் உருவுமை என்று தொடங்கும் பாடல் இத்தலத்துக்குறியது.
இறைவன்: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்
இறைவி : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு இருதய கமலநாதேஸ்வரர் திருக்கோயில், வலிவலம் & அஞ்சல் – 610 207 திருக்குவளை வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 04366-205636

இருப்பிட வரைபடம்


பிடியதன் உரு உமைகொள மிகுகரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே 
      - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பிடியதன் உரு உமைகொள


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க