banner
புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 227 கி.மீ., சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 217 கி.மீ., சென்னையிலிருந்து 267 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ. மதுரையிலிருந்து 322 கி.மீ.
வரிசை எண் : 70
சிறப்பு : புள்+இருக்கு+வேள்+ஊர்; புள் = ஜடாயு, இருக்கு = வேதம்; வேள் = முருகன். ஜடாயுவும், வேதமும், முருகனும் வழிபட்ட தலம். செவ்வாய்த் தோஷம் உள்ளவர்களுக்குப் பரிகாரத்தலம். இத்தலத்தில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகள் சகல நோய்களும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
இறைவன்: வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் & அஞ்சல் – 609 117 சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.30 – 01.00 ;மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04364-279423

இருப்பிட வரைபடம்


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை 
 பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை 
 மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை 
 திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 
 போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
 			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 பேராயிரம் பரவி வானோர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க