அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 307 கி.மீ., திருச்சியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
செங்கல்பட்டிலிருந்து 287 கி.மீ., சென்னையிலிருந்து 337 கி.மீ. மதுரையிலிருந்து 157 கி.மீ.
வரிசை எண் : 122
சிறப்பு : சோழர்களின் தலைநகராக இருந்தது. புகழ்ச்சோழ மன்னர் ஆண்ட பகுதி. உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து வண்ணங்களில் காட்சி நல்கிய தலம். வீரவாதித்தன் என்னும் மன்னனுடைய யானையை கோழி ஒன்று
வென்ற வரலாற்றை விளக்கும் சிற்பம் சந்நிதியின் அருகே காணலாம். கடை வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர் மிகச் சிறிய திருமேனி. கருவறையின் வெளிச் சுவற்றில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. உதங்க முனிவர்,
புகழ்ச்சோழ நாயனார் சிற்பங்கள் உள்ளன. தூண் ஒன்றில் ஐந்து பெண்களின் உருவம் ஒரு குதிரையின்
வடிவத்திற்குள் அடக்கி வடிவமைத்துள்ள அழகு வியக்கத்தக்கது. அது போல் அம்பாள் சந்நிதியின் வெளிப்புறத்தில்
பறவையின் கால், மனித உடல், யானை முகம் கொண்ட ஒரு சிற்பம். அதன் மறு பக்கத்தில் யானையை
கோழி கொத்துவது போன்ற சிற்பம். திருநீற்றை வாங்கி அதனை ஊதிச் சிந்தியது காரணமாக காட்டுப்
பன்றியாகப் பிறந்து வேடர் துறத்த இந்த்த் தலத்து குளத்தில் வந்து வீழ்ந்து உய்ந்தது. இதனை விளக்கும்
சிற்பம் குளத்துக் கல் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது.
இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி : காந்திமதி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர் & அஞ்சல் – 620 003.
திருச்சி, திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ;மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9442628044
இருப்பிட வரைபடம்
|