அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 300 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 280 கி.மீ., சென்னையிலிருந்து 330 கி.மீ.
மதுரையிலிருந்து 150 கி.மீ.
வரிசை எண் : 123
சிறப்பு : பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது. மலை மீது அமைந்த தலம். சற்றுத் தொலைவில்
இருந்து பார்த்தால் இம்மலை ஒரு யானை படுத்திருப்பது போல் காணப்படும். அடிவாரத்தில் மணிக்க
விநாயகர் சந்நிதியும், மலை ஏறும்போது நடுவில் தாயுமானவர் கோயிலும், உச்சியில் உச்சியில்
உச்சிப்பிள்ளையார் கோயிலும் உள்ளன. தாயுமானவர் கோயில்தான் பாடல் பெற்ற தலம். ஒரு பெண்ணின்
மகப்பேறு காலத்தில் இறைவனே தாயாக வந்து உதவி செய்தமையால் இவர் தாயும் ஆனவர் என்று
அழைக்கப்பட்டார். மூன்று தலைகளை உடைய ஒரு அரசன் ஆண்ட பகுதி என்றதால் திரிசிராபள்ளி
என்றழைக்கப்பட்டது. இந்தப் பகுதியைத் தற்போது மலைக்கோட்டை என்றும் அழைக்கின்றனர்.
அடிவாரத்திலிருந்து தாயுமானவர் சந்நிதி 258 படிகள். சிவலிங்கம் பெரிய திருமேனி. இவ் இறைவரைக்
காணும்போது நமக்கே உள்ளம் குளிரும். சம்பந்தர் பெருமான் பாடியதைக் கேட்கவேண்டுமே!
இறைவன்: தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், தாயுமானசுவாமி
இறைவி : மட்டுவார்குழலி, சுகுந்தகுந்தளாம்பிகை
தலமரம் : -
தீர்த்தம் : காவிரி
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை – 620 002,
திருச்சி திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 இரவு 08.00 வரை
தொடர்புக்கு : 0431-2704621, 0431-2710484
இருப்பிட வரைபடம்
|