banner
சோழநாடு - திருவிற்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 235 கி.மீ. மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் கங்களாஞ்சேரி வந்து இடப்புறம் செல்லும் நாகப்பட்டினம் சாலையில் திருவிற்குடியிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 236 கி.மீ., சென்னையிலிருந்து 278 கி.மீ. திருச்சியிலிருந்து 92 கி.மீ. மதுரையிலிருந்து 263 கி.மீ.
வரிசை எண் : 191
சிறப்பு : அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. சலந்தரனை அழித்த தலம். அவன் மனைவியைத் திருமால் துளசியாக ஏற்ற தலம். சலந்தரனை சம்ஹரித்த மூர்த்தி மிகவும் அழகு.
இறைவன்: வீரட்டானேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி, பரிமளநாயகி
தலமரம் : துளசி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி & அஞ்சல் – 610 101 (வழி) கங்களாஞ்சேரி நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 9443921146

இருப்பிட வரைபடம்


வடிகொள் மேனியர் வானமதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர் உடை புலியதளார்ப்பர்
விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம்
அடியராகி நின்றேத்த வல்லார்தமை அருவினை அடையாவே 
                 - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 வடிகொள் மேனியர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க