அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 240 கி.மீ., கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக 9 கி.மீ. சென்றால்
இத் தலம். சுவாமிமலைக்கு அருகில். செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து
82 கி.மீ. மதுரையிலிருந்து 212 கி.மீ.
வரிசை எண் : 142
சிறப்பு : காவிரி வலமாகச் சுழித்துச் செல்லும் இடமாதலால் திருவலஞ்சுழி எனப்பெயர். ஏரண்ட முனிவர், ஆதிசேஷன்
பிரமன் வழிபட்ட தலம். வெள்ளைப் பிள்ளையார் இங்கு சிறப்பு . விநாயகர் மண்டபம் இந்திரன் அமைத்தது. சித்திர மண்டபம்,
கல் குத்துவிளக்கு அழகு. வெள்ளைப் பிள்ளையார் கடல் நுரையால் ஆனவர். இவருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்படுகிறது.
இறைவன்:கபர்த்தீஸ்வரர், செஞ்சடைநாதர், வலஞ்சுழிநாதர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வலஞ்சுழிநாதர் திருக்கோயில்,
வலஞ்சுழி,
சுவாமிமலை அஞ்சல் – 612 302
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2454421, 0435-2454026
இருப்பிட வரைபடம்
|