banner
சோழநாடு - திருவாய்மூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. எட்டுக்குடியிலிருந்து 5 கி.மீ. செல்லவேண்டு. செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ.
வரிசை எண் : 241
சிறப்பு : சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. சூரியன் வழிபட்ட தலம். அப்பர் பெருமானை இறைவன் வாய்மூர்க்கு வா என்று கூறி ஒளி வடிவாக அழைத்து வந்த தலம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.
இறைவன்: வாய்மூர்நாதர்
இறைவி : க்ஷீரோபவசனி, பாலின்நன்மொழியாள்
தலமரம் : பலா மரம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர் & அஞ்சல் – 610 204, (வழி) திருக்குவளை திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : ???

இருப்பிட வரைபடம்


பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல் கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையில் கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடல்தலை ஒன்று கையில் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே 
             - அப்பர்
பாடல் கேளுங்கள்
 பாட அடியார் பரவ


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க