banner
சோழநாடு - திருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 241 கி.மீ., கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி செல்லும் சாலையில் சென்றால் இத் தலம். செங்கல்பட்டிலிருந்து 261 கி.மீ., சென்னையிலிருந்து 311 கி.மீ. திருச்சியிலிருந்து 80 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 139
சிறப்பு : இறைவனை பார்வதி தேவி தழுவி முத்தமிட்ட தலம். மூலவர் பக்கத்தில் இறைவி இறைவனைத் தழுவி முத்தமிடும் சிலையைக் காணலாம். அப்பர் சுவாமிகள் இறைவனைத் திருவடி தீட்சை வேண்டிய தலம்.
இறைவன்: சிவக்கொழுந்தீசர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் :
தீர்த்தம் : சூல தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்அப்பர்
முகவரி : அருள்மிகு. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம் அஞ்சல் – 612 703 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04374-267237, 9443564221, 9443678575

இருப்பிட வரைபடம்


கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய் முழங்கும் தழல்கைத்
தேவா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
>பாடல் கேளுங்கள்
 கோவாய் முடுகி அடுதிறல்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க