சோழநாடு - திருக்கொள்ளிக்காடு (கள்ளிக்காடு)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 14 கி.மீ. சென்று திருநெல்லிக்கா சென்று அங்கிருந்து திருத்தெங்கூர் சென்று அங்கிருந்து 4 கி.மீ. செல்ல வேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 232
சிறப்பு : கொள்ளி என்றால் அக்கினி. அக்கினி வழிபட்ட தலம். சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலம். இங்கு சனி பகவான் சந்நிதி விசேடம்.
இறைவன்: அக்கினிஸ்வரர்
இறைவி : மிருதுபாதநாயகி, பஞ்சின்மெல்லடியம்மை
தலமரம் : வன்னி
தீர்த்தம் :
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. அக்கினிஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிகாடு, கீராலத்தூர் அஞ்சல் – 610 205, (வழி) திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ; மாலை 05.00 – 07.30
தொடர்புக்கு : 04369-237454

இருப்பிட வரைபடம்


பஞ்சுதோய்மெல்லடிப் பாவையாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
வெஞ்சுன மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிகாடரே
          - அப்பர்
பாடல் கேளுங்கள்
 பஞ்சுதோய்மெல்லடி



View CHOLA NADU in a larger map
சோழநாடு தலவரிசை தரிசிக்க