banner
சோழநாடு - திருச்சேறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 242 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 272 கி.மீ., சென்னையிலிருந்து 284 கி.மீ. திருச்சியிலிருந்து 98 கி.மீ. மதுரையிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 212
சிறப்பு : மார்க்கண்டேயர், கௌதம முனிவர் வழிபட்டது. மக்கள் இக்கோயிலை உடையார் கோயில் என்பர். வயல் சூழ்ந்து உள்ள சேற்றூர் பின்பு சேறை என்றானது.
இறைவன்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்
இறைவி : ஞானவல்லி
தலமரம் : மாவிலங்கை
தீர்த்தம் : மார்கண்டேய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. செந்நெறியப்பர் திருக்கோயில், திருச்சேறை & அஞ்சல் – 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.30
தொடர்புக்கு : 9443737759, 0435-2467759

இருப்பிட வரைபடம்


என்னமாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னுவார் சடை வேதவிழுப்பொருள்
செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி
மன்னுசோதி நம்பால் வந்து வைகவே
                - அப்பர்
பாடல் கேளுங்கள்
 என்னமாதவம் செய்தனை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க