banner
சோழநாடு - திருவுசாத்தானம் (கோயிலூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 315 கி.மீ. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடிசாலையில் 2 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 271 கி.மீ., சென்னையிலிருந்து 358 கி.மீ. திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 210 கி.மீ.
வரிசை எண் : 224
சிறப்பு : இந்திரன், இராமர், ஜாம்பவான், சுக்கிரீவன், அநுமன் வழிபட்ட தலம். இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் உபதேசம் கேட்ட்தாக வரலாறு. அது பற்றி இறைவனிடம் இராமர் உசாவியதால் (கேட்டதால்) இதற்கு உசாத்தானம் என்று பெயர்.
இறைவன்: மந்திரபுரீஸ்வரர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : மா
தீர்த்தம் : அநுமன், மார்கண்டேய தீர்த்தங்கள்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை அஞ்சல் – 614 704 திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 04369-262014, 9942039494

இருப்பிட வரைபடம்


நீரிடைத் துயின்றவன் தம்பி நீள்சாம்புவான்
போருடைச் சுக்ரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே
      - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 நீரிடைத் துயின்றவன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க