banner
சோழநாடு - திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 340 கி.மீ., திருச்சியிலிருந்து நாமக்கல், சேலம் சாலையில் 35 கி.மீ. தொலைவில் முசிறிக்கு முன்பாக உள்ளது இக்கோயில். திருச்சியிலிருந்து குளித்தலை வந்து அங்கிருந்து 5 கி.மீ. வரவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 292 கி.மீ., சென்னையிலிருந்து 347 கி.மீ. மதுரையிலிருந்து 143 கி.மீ.
வரிசை எண் : 117
சிறப்பு : சிவலிங்கம் பச்சை நிறத்தில் உள்ளது. ஒரே நாளில் திருவாட்போக்கி, ஈங்கோய்மலை, கடம்பர் கோயில் என்ற மூன்றையும் வழிபடுவது சிறப்பு . இதில் கடம்பர் கோயிலைக் காலையிலும் திருவாட்போக்கியை பகலிலும் திருஈங்கோய் மலையை மாலையிலும் வழிபடவேண்டும் என்பது விதி.
இறைவன்: மரகதநாதர், மரகதாசலேஸ்வரர்
இறைவி : மரகதவல்லி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருவிங்கநாதமலை – 621 209 (வழி) மணமேடு தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 10.00 – 12.00 ;மாலை 04.30 – 06.00
தொடர்புக்கு : 9443950031, 9443192145

இருப்பிட வரைபடம்


வினையாயின தீர்த்தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியம் சூடுநம்பா நலமல்கு
தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோடு அனலேந்தும்
எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
							- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 வினையாயின தீர்த்தருளே


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க